news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் கடவுச்சீட்டு பெறுவதில் சிக்கல்!

25 Jul, 2023
இணையம் மூலம் கடவுசீட்டினைப் பெற்றுக்கொள்பவர்கள் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில், சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந்துள்ளதால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் ”அதிகாரிகள் ஊடகங்கள் ஊடாக இது குறித்து அறியப்படுத்தியிருந்தால் கூட தாம் இது போன்ற சிரமத்தை எதிர்கொள்ளவேண்டி இருந்திருக்காது எனவும், தாம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தைத் தெரிவு செய்து இருப்போம்” எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இயந்திரத்தை சரி செய்ய கொழும்பில் இருந்து தொழில்நுட்பவியலாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும். எனவே மீண்டும் எப்போது இயந்திரத்தை இயக்கமுடியும் என கூறமுடியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!