news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் கணவனை மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சி ; ஒருவர் கைது ; இருவர் தலைமறைவு

26 Dec, 2022
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர், இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த மூவர் , வீட்டில் இருந்த கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி , மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளனர். இதன்போது, அவர்கள் அபய குரல் எழுப்பவே, வீட்டினுள் நுழைந்த மூவரும், அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, தலைமறைவாகியுள்ள இருவரையும் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!