இந்திய-நேபாள எல்லையில் கைதான 3 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் ; தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை
26 Oct, 2026
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை தீ மூட்டி , முச்சக்கர வண்டி மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த போது , வீட்டில் வசிக்கும் யுவதிக்கும் இளைஞன் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் , தற்போது இருவரும் முரண்பட்டு பிரிந்து உள்ளமையால் காதலனே தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தாக்குதல் சந்தேக நபரான காதலனை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!