news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் கிணற்றடியில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

10 Sep, 2024
யாழில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்ற ஒருவர் நேற்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், இந்த நபர் நேற்று இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்று தோட்டவேலையை செய்து விட்டு வீட்டுக்கு வந்து குளிப்பதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குளிப்பதற்கு சென்ற கணவன் நீண்ட நேரமாக திரும்பி வராத காரணத்தினால் மனைவி கிணற்றடிக்கு சென்று பார்வையிட்டவேளை கணவன் நிலத்தில் விழுந்து கிடந்துள்ளார். இந்நிலையில் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதர வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். உடற்கூட்டு பரிசோதனைக்காக சடலமானது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!