news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையநபர் வாள், இரும்புக் குழாய்களுடன் கைதானார்

16 Jul, 2020
வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.   யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த நபரே சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினமிரவு கைது செய்யப்பட்டார். கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலை வீதியில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டமை மற்றும் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்று, விக்கெற் கட்டை, இரும்பு குழாய்கள் மற்றும் ஜக்கட் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!