யாழில் கோர விபத்தில் கணவன் பலி! மனைவி படுகாயம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயம் அடைந்துள்ளார்.
அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றைய தினம் (05.05.2023) விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் பலி
ஹயஸ் - மோட்டார் சைக்கிளில் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் கோர விபத்தில் கணவன் பலி! மனைவி படுகாயம் | Accident In Jaffna Husband Dies Wife Injured
பொலிஸார் விசாரணை
பூம்புகார் பகுதியை சேர்ந்த 39 வயதான அற்புதசிங்கம் சுதர்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!