news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் கொடூரத் தாக்குதல்!

23 Feb, 2024
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவனை ஆசிரியர் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மாணவனை விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் அழைக்க, மாணவன் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியர், உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனை தடியால் அடித்துள்ளார். ஆசிரியர் முரட்டுத்தனமாக தாக்கியதில் சிறுவனின் கைகளில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் ஆசிரியர் தாக்கியமை, தாக்குதலை நேரில் கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!