தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் மற்றும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.
இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் யாழ்.வந்த ஐனாதிபதி யாழ்.கைலாச பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாமனின் இல்லத்தில் காணாமல்போனவர்களுடைய உறவினர்கள் மற்றும் வலிவடக்கு இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
சுமார் 2 மணி நேரம் யாழ்.மாவட்டத்தில் நின்றிருந்த ஐனாதிபதி 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றார்.







கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!