news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் சடலம் ஒன்று மீட்பு

02 Apr, 2022
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் தனியார் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1 மணியின் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் குறித்த நபரை சடலமாக அவதானித்து யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் உயிரிழந்தவருடன் மேலும் பலர் நீராடி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கை இறப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்:

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!