news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு!

08 Mar, 2025
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. கரவெட்டி - மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் என்ற வயது 14 மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். உயிரிழந்த குறித்த மாணவன் யா/ கரவெட்டி இருதயக்கல்லூரியில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார். யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு! | 14 Years Old School Student Died Jaffna இந்தநிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!