news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் பலி

20 Jun, 2020
யாழில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் யாழ்ப்பாணம், முகமாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பளை, கெற்பலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். முகாமாலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்தாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!