news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் நடிகை ரம்பா

14 Dec, 2023
தென்னிந்திய நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொதேர்ன் யுனியின் அனுசரணையில் எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்தியப் பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!