யாழில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது!
யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிசார் தந்தையை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதுடன், குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!