news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் - இருவர் கைது

09 Feb, 2024
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இருவரும் அராலி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் . யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சாதாரண உடையில் இருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!