news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் - சந்தேகநபர் கைது

21 Oct, 2015
 

நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் மூன்று வயது மகனுடன் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறியதோடு, தாயின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

8 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது

1518451426Untitled-1 பதவிய - ருவன்புர பகுதியில் பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் இவர் 26 வயதான பட்டதாரியாவார்.

மேலும் சம்பவத்தில் 09 - 10 வயது மதிக்கத்தக்க மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர் கைதாகியுள்ளனர்.

சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!