news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில்.வயலுக்குள் பாய்ந்த தனியார் போக்குவரத்து

17 Jul, 2025
தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று வியாழக்கிழமை (17) அன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இருக்கும் வயலுக்குள் பாய்ந்துள்ளது. குறித்த பேருந்து அண்ணளவாக 10-15 km h வேகத்தில் சென்று கொண்டிருந்த வேளை வலது புறமாக வீதிக்கு மாறி மெதுவாக சென்று வயலில் விழுந்தது. இருப்பினும் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிராபத்து ஏற்படவில்லை. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!