news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் விபத்து ; பெண் உயிரிழப்பு!

03 Aug, 2024
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று சனிக்கிழமை (03) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு பெண்களை ஹை-ஏஸ் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!