யாழில் வீடுடைத்து தங்க நகைகளை கொள்ளையிட்டவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் வீடொன்றை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். நகர்ப் பகுதியை அண்டிய பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டில் இருந்த சுமார் 2 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.
இந்த நகை திருட்டு தொடர்பில் உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், இந்த திருட்டோடு சம்பந்தப்பட்ட நபரொருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!