news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

05 Mar, 2025
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று புதன்கிழமை (05) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 41 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!