news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி சடலமாக மீட்பு!

10 Sep, 2024
யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (09) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடையரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை. மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் சாப்பாட்டினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம். அந்தவகையில் இவருக்கு வழமையாக சாப்பாட்டினை கொடுக்க வந்த பெண் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவர் உயிரோட்டம் இன்றி இருப்பதை அவதானித்துள்ளார். இந்நிலையில் அயல் வீட்டாரின் உதவியுடன் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!