news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் 27 லீற்றர் கசிப்புடன் பூசகர் கைது

04 Jun, 2020
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏழாலையை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பை வீட்டுக்குள்  மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த குறித்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்புக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே  இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் அடுத்தவாரம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பூசகர் இதே குற்றச்சாட்டில் ஏற்கனவே  ஒரு தடவை கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!