news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்/ புங்குடுதீவு பிரதேசத்தில் 300 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

02 Feb, 2020

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் சுமார் 300 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

300kg-Kerala-Cannabis-Seized-4-Arrested-2

புங்குடுதீவு கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்துகிடமான மீன்பிடி படகொன்று, இன்று அதிகாலை ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அப்படகை சோதனையிட்டபோது அதிலிருந்து 300 கிலோ கேரள கஞ்சாவை மீட்டதுடன் படகிலிருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கமைய, மேலும் இரு சந்தேகநபர்கள், யாழ். சங்குப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகம் தெரிவித்ததுள்ளது.   300kg-Kerala-Cannabis-Seized-4-Arrested-3

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!