news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்தவர் உயிரிழப்பு!

26 Oct, 2024
யாழ்ப்பாணத்தில் நபரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (25) உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு நீண்ட வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கியிருந்தது. அதன்பின்னர் இவருக்கு இடையியைடே வாந்தி ஏற்படுவது வழமை. கடந்த 25ஆம் திகதியும் காலை 10 மணிக்கு இவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் 11 மணியளவில் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!