news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து: ஆறு பேர் காயமடைந்தனர்

10 Jan, 2026

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று (9) இரவு வாகன விபத்து ஏற்பட்டது, இதில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியில் ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தோரில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!