news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது

09 Aug, 2024
யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 வாள்கள், 4 பெற்றோல் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (a)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!