முல்லைத்தீவில் மாணவியை வன்புணர்ந்த பூசகரின் தண்டனை உறுதி
22 Nov, 2026
இனவாதமற்று வளமான நாடே எமக்குத் தேவை. எம்மிடையே வேறுபட்ட கலாசாரங்கள் இருக்கின்றன. ஒரு நாடு எவ்வாறு அழகாகும்? மக்கள் மத்தியில் எவ்வாறு நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்? இந்த அனைத்து கலாசாரங்களினதும் கௌரவம், மதிப்பு மற்றும் அங்கீகாரம் என்பன மிக முக்கியமானது. நாம் அத்தகைய நாட்டை உருவாக்க வேண்டும். அது தான் எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
பொருளாதார ரீதியில் பெரும் அழுதத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இருப்பதை விட சிறந்த வாழ்க்கை நிலையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக சிறந்த வீட்டை வழங்குவது சிறந்த கல்வியை வழங்குவது ஆரோக்கியமான வாழ்விற்காக சிறந்த சுகாதார சேவையை ஸ்தாபிப்பது விவசாயம் ,மீன்பிடித்துறை என்பவற்றை முன்னேற்றி சிறந்த வருமான வழியை அமைத்துக் கொடுப்பது இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது போன்றவை அரசாங்கம் என்ற வகையில் எமக்குள்ள எதிர்பார்ப்புகளாகும்.
இங்கிருக்கும் அநேகமானோர் கடந்த பொதுத் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து யாழ் மாவட்டத்தை முதன்முறையாக வெற்றி கொள்ள பங்களித்தவர்களாகும். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிறிதளவாவது வீழ்ச்சியடைய இடமளிக்காது இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவோம்.
உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் உருவாக்குவோம். இங்கு திரண்டுள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதுதான் என்பதை நாம் அறிவோம். மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக நாம் தயக்கமின்றி எமது பொறுப்பை நிறைவேற்றுவோம்.
இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒரு பிரார்த்தனை செய்வோம். நாம் பிரியாதிருப்போம். நாம் ஒன்றுபடுவோம். சிறந்த நாட்டை எமது மக்களுக்காக உருவாக்குவோம். அனைவரும் திடஉறுதியுடன் முன்வர வேண்டுமென பிரார்த்திக்கிறேன்'' என்றும் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றுகையில், “வேலணைப் பிரதேசத்தில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இவ்வாறானதொரு விழா நடைபெறுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
இப்பிரதேசம் உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் மக்கள் குறைந்தபட்ச வசதிகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியிலும் இன்று சிறார்கள் மிகவும் வர்ணமயமான கலாசார நிகழ்வுகளை மேடையேற்றினர்.
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தற்போது பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த அபிவிருத்திச் செயற்பாடுகளின் கீழ் கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளும் இடம்பெறுகின்றது. தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் யாழ்ப்பாண மக்களுக்காக புதிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.
வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கே.இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா உள்ளிட்ட பாதுகாப்புப் படைத் தலைவர்களும், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பெருமளவிலான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!