news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். அல்லைப்பிட்டியில் விபத்து ; பெண்ணொருவர் உயிரிழப்பு

19 Feb, 2024
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பஸ்ஸில் இறங்க முற்பட்ட வேளை சாரதி பஸ்ஸை நகர்த்தியமையால், பஸ்ஸிலிருந்து தவறி விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!