news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் உட்பட பல பகுதிகளுக்கு பேருந்தில் பயணித்த கொரோனா நோயாளிகள்!

15 Oct, 2020
இலங்கையில் இதுவரையில், கொரோனா தொற்றாளர்கள் பயணித்த ஆறு பேருந்துகள் இனங்காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதிசொகுசு பேருந்துகளினுள் பயணிகளை ஏற்றும்போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இதேவேளை ND 4890 கொழும்பு – மெதகம பேருந்திலும் ND 2350 மாகும்புர – காலி பேருந்திலும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.அத்தோடு, ND 0549 கடவத்த – அம்பலாங்கொட பேருந்திலும் ND 6503 கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்திலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ND 9788 எல்பிட்டிய – கொழும்பு பேருந்து மற்றும் NF 7515 காலி – கடவத்த பேருந்து ஆகியவற்றிலும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!