news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். குருநகரில் பரபரப்பு: கடலில் மூழ்கிய பக்தர்களின் படகு: இருவர் பலி

06 Mar, 2026
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குருநகர் பகுதியைச் சேர்ந்த இருவரின் சடலமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 13 வயது சிறுவன், 04 பெண்கள் 08 ஆண்கள் என 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கடல் வழியாகப் பயணிப்பது வழக்கம். வெள்ளிக்கிழமை (06) அன்று, பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியது. இவ்விபத்தில் யாத்திரிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ளனர்.இதுவரை மூன்று பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஏனைய பக்தர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமானது. இன்று (06) நற்கருணை பெருவிழா இடம்பெறுகின்றது. நாளை (07) சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!