news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் சங்கானை பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு

19 Mar, 2026
சங்கானை பட்டினசாலை ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் தவறான முடிவெ டுத்து உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப் பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த தியாகராசா கிந்துசன் (வயது-22) என்பவராவார். சடலம் காணப்படுவதாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபால சிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ். போதனா வைத்தியசா லையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மானிப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட் டார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!