news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் - கார் விபத்து ; ஒருவர் பலி

01 Dec, 2024
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு - இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (30) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்தில் சிக்கியுள்ளார். அதன் பின்னர், நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் 30 நிமிடங்களின் பின்னரே நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்துக்கு சென்றுள்ளது. அதனையடுத்து, அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கியவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!