news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்: தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்பு!

21 May, 2024
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. ஜே/26 கிராம சேவகர் பிரிவிலும் ஜே/21 கிராம சேவகர் பிரிவிலும் அடிப்படை கட்டமைப்பு ஒவ்வொன்று சேதமடைந்துள்ளதுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/232 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/263 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 80.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!