news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். நகரில் மீண்டும் கொவிட் 19 பரவல்

20 Apr, 2023
யாழ். குடாநாட்டில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட 05 பேர், தனிமைப்படுத்தல் விடுதியில் வைக்கப்பட்டு ஒட்சிசன் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட்19 தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டது.இதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட்19 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன . இதன்போது 03 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது. கொவிட்19 இன் திரிபு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது. அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 05 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று கொழும்பு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!