news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். நீர்வேலியில் விபத்து - பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

21 Feb, 2024
யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய மாணவனே இன்று புதன்கிழமை (21) உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் மோட்டார் சைக்கிளில் மானிப்பாயிலிருந்து நீர்வேலி பகுதிக்கு சென்ற போது வீதியின் குறுக்கே ஓடிய நாய் மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. யாழில் உள்ள பிரபல உதைப்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான ஊரெழு றோயல் கழகத்தின் பிரபல வீரருமாவார். விபத்தில் காயமடைந்தவரை மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!