news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் நோக்கி சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து ; மூவர் படுகாயம்

30 Sep, 2025
கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.​ கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.​ விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!