news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் பிறந்த 5 குழந்தைகள்..!

26 May, 2025
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார். தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!