news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு ; போதை ஊசி ஏற்றியதாக சந்தேகம்

19 Jul, 2023
யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்றைய தினம் இரவு விடுதிக்கு வந்துள்ளார். எனினும், பின்னர் அவரை காணாத நிலையில், அவரை தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. கொக்குவில் தெற்கு, தாவடி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் என்ற 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்காரணமாக பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!