news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் வடமராட்சி - கரணவாய் வீதி விபத்தில் 17வயது மாணவன் மரணம்

04 Jun, 2022
வடமராட்சி - கரணவாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை கரணவாய் மண்டாண் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்டதில் இந்த விபத்து  சம்பவித்துள்ளது. இதில், கரணவாய்  பகுதியை சேர்ந்த பானுஜன் வயது 17 என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!