சவூதியின் விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
30 Oct, 2026
டொனால்ட் டிரம்ப் உடனும் இந்த முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் பின்னர் பிபிசியிடம் கூறுகையில், தங்களின் உடனடி போர் நிறுத்த பரிந்துரை "நிச்சயம் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று" என்பதில் டிரம்ப் "முற்றிலும் தெளிவாக உள்ளதாக" தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு யுக்ரேனுடன் "துணை நிற்பதற்காக" தலைவர்களுக்கு ஸெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
'அமைதிக்கான முதல் படி'
இந்த முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ், "எங்கள் மீது அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது வீணானது," என்றார்.
ஐரோப்பாவின் கருத்துகள் பெரும்பாலும், "பொதுவாக உறவுகளை புதுப்பிப்பதை விட மோதல் போக்குடனேயே இருக்கும்," என்றும் பெஸ்கோவ் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் குறித்து யோசிப்பதற்கு முன்பு, மேற்கு நாடுகள் முதலில் யுக்ரேனுக்கு ராணுவ உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என, முன்னதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி
கடந்த மாதம் ஈஸ்டரை ஒட்டி போர் நிறுத்தம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவது உட்பட பல்வேறு போர் நிறுத்த முன்மொழிவுகள் குறித்து பதிலளிக்க யுக்ரேன் தொடர்ந்து தோல்வியடைந்ததாக புதின் குற்றம் சட்டினார்.
இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவுக்காக தான் அறிவித்த 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தையும் புதின் குறிப்பிட்டார். இது, சனிக்கிழமை நள்ளிரவு உள்ளூர் நேரப்படி இரவு 09:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
'ஒருதலைபட்சமான', மூன்று நாள் சண்டை நிறுத்தத்தை மறுத்த யுக்ரேன், அதுவொரு "நாடகம்" என குறிப்பிட்டது. அதற்கு மாறாக, குறைந்தது 30 நாட்களுக்கு நீடிக்கும் போர் நிறுத்தத்தை ஸெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
ரஷ்யா கூறும் சண்டை நிறுத்தம் அமலான வியாழக்கிழமை அன்றே, 730 மீறல்கள் நிகழ்ந்ததாக ரஷ்யா மீது குற்றம் சாட்டிய யுக்ரேன், அதற்கு "தகுந்த முறையில்" எதிர்வினையாற்றியதாக தெரிவித்தது.
யுக்ரேன் 488 சண்டை நிறுத்த மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தங்கள் தரப்பில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்தது.
"எல்லாவற்றையும் தாண்டி, பேச்சுவார்த்தைகளை தொடர நாங்கள் யுக்ரேனிடம் கூறுகிறோம்… நேரடி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும், எவ்வித நிபந்தனையும் இன்றி இதை நான் வலியுறுத்துகிறேன்," என சனிக்கிழமை புதின் தெரிவித்தார்.
யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா தொடங்கிய கடந்த 2022ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!