இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
Graphic of two Russian short range nuclear weapons
தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் இதுவரை எந்த மோதலிலும் பயன்படுத்தப்படவில்லை.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற அணுசக்தி நாடுகள், மரபுவழி ஆயுதங்களைப் பயன்படுத்தி போர்க்களத்தில் இலக்குகளை அழிப்பது, சமமான பலனை தருவதாகக் கண்டறிந்துள்ளன.
கூடுதலாக, எந்த அணு ஆயுத நாடும் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து அணு ஆயுதப் போரையும் கட்டவிழ்த்துவிட அவை இதுவரை தயாராக இல்லை.
இருப்பினும், பெரிய மூலோபாய ஏவுகணைகளை விட சிறிய தந்திரோபாய ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்கலாம்.
சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் அமைப்பின் சர்வதேச பாதுகாப்புத் திட்ட தலைவரான டாக்டர் பாட்ரிசியா லூயிஸ், "இந்த மிகப்பெரிய அணுசக்தி பயன்பாட்டை கடக்க முடியாது என அந்த நாடுகள் கருதியிருக்கலாம். "அவை தங்கள் வழக்கமான படைகளின் ஒரு பகுதியாகவே இந்த ஆயுதங்களைப் பார்க்கின்றன," என்கிறார்.
ரஷ்ய ஆயுத பலம்
ரஷ்யப் படைகள் சிறிய அணு ஆயுதங்களைச் சுட, "மல்கா" எனப்படும் சுயமாக இயக்கப்படும் துப்பாக்கி போன்ற வழக்கமான பீரங்கிகளையே பயன்படுத்துகின்றன.
புதினின் அணுசக்தி அச்சுறுத்தல்கள் கவலைக்குரிய உண்மையான காரணமா?
பிப்ரவரி 2022இல், யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு சற்று முன்பு, ரஷ்யாவின் அணுசக்தி படையினரை, "போர் தயார்நிலையில்" வைத்து, உயரிய அணு ஆயுத பயிற்சிகளை அதிபர் புதின் வழங்கினார்.
மிக சமீபத்தில், அவர் இது பற்றி பேசும்போது, "எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், ரஷ்யாவையும் எங்கள் மக்களையும் பாதுகாக்க நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம். இது ஒரு முட்டாள்தனம் அல்ல," என்று கூறினார்.
ரஷ்யா தான் ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது.
பிரிந்து செல்லும் "மக்கள் குடியரசுகளை" உருவாக்க போலியான வாக்கெடுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது மற்றும் அதிபர் புதின் "எல்லா வகையிலும்" பிராந்தியங்களின் "ஒருமைப்பாட்டை" பாதுகாக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்.
இந்த பிராந்தியங்களை மீண்டும் தன் வசப்படுத்த யுக்ரேனுக்கு மேற்கு நாடுகள் உதவாமல் இருப்பதை ஒரு அச்சுறுத்தலாக அமெரிக்க உளவுத்துறை பார்க்கிறது.
ஆனால் மேலும் பின்னடைவை சந்தித்தால், தோல்வியையோ முடங்கிப் போயிருப்பதையோ தவிர்க்க யுக்ரேனில் ஒரு சிறிய தந்திரோபாய ஆயுதத்தை "புதிய திருப்பமாக" பயன்படுத்த ரஷ்யா ஆசைப்படலாம் என்று மற்ற நாடுகள் கவலைப்படுகின்றன.
வாஷிங்டன் டிசியில் உள்ள கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பேஸின் அணுசக்தி நிபுணரான ஜேம்ஸ் ஆக்டன், "அத்தகைய சூழ்நிலையில், புதின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவார் என்று நான் சட்டபூர்வமாக கவலைப்படுகிறேன் - பெரும்பாலும் யுக்ரேனில் களத்தில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி, தனது காரியத்தை சாதிக்க அவர் நினைக்கலாம்," என்கிறார்.
Comparison of the estimated number of warheads held each of the nine nuclear-armed countries.
அமெரிக்கா எவ்வாறு எதிர்வினையாற்றியது?
யுக்ரேன் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிபிஎஸ் நியூஸுக்கு அளித்த ஒரு நேர்காணலின் போது பேசிய பைடன், அத்தகைய நடவடிக்கை "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரின் முகத்தை மாற்றும். அது விளைவாகவும் இருக்கும்," என்று கூறினார்.
எந்தவொரு அணுசக்தி பயன்பாட்டிற்கும் அமெரிக்காவும் நேட்டோவும் எவ்வாறு பதிலளிக்கும் என்பதை கணிப்பது கடினம். யுக்ரேனில் நிலைமையை மேலும் தீவிரமாக்க விரும்பவில்லை.
அணுசக்தி யுத்தத்தை அது ஆபத்தில் ஆழ்த்தலாம். ஆனால் அந்த நாடுகள் ஒரு வரையறை கோட்டை போட்டுக் கொள்ள விரும்பலாம்.
இருப்பினும், ரஷ்யா தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருக்க மற்றொரு சக்தியான சீனா தடுக்கலாம்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் அணுசக்தி நிபுணரான டாக்டர் ஹீதர் வில்லியம்ஸ், "ரஷ்யா சீனாவின் ஆதரவை பெரிதும் சார்ந்துள்ளது. "ஆனால் சீனாவுக்கு 'முதலில் பயன்படுத்தக்கூடாது' என்ற அணுசக்தி கோட்பாடு உள்ளது.
எனவே புதின் அவற்றைப் பயன்படுத்தினால், சீனா அவருக்கு ஆதரவாக நிற்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருக்கும்.
அதையும் மீறி புதின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், அவர் சீனாவை இழக்க நேரிடும்," என்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!