கெசல்கமு ஆற்றில் விழுந்து 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!
02 Nov, 2026
நீரில் மூழ்கிய யுவதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீரிற்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை காப்பாற்றியுள்ளார்.
எனினும், காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் காணாமல் போயிருந்தார். அதன்பின் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்படி நபரின் சடலம் மீட்கப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என தெரிவிக்கப்படுகிறது.
காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!