news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ரயிலுடன் கார் மோதி விபத்து : கர்ப்பிணி தாயும் அவரது 7 வயது மகளும் பலி

18 Jul, 2022
காலி - மகுலுவ ரயில் கடவையில் பயணித்த காரொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் கர்ப்பிணி தாயும் அவரது 7 வயது மகளும் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் சிக்கிய மேலும் 4 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிகழ்வொன்றுக்காக சென்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர்கள் பயணித்த கார் ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணித்தாய் மற்றும் 7 வயது மகள் ஆகியோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!