இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனின் தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யாவிற்குள் நடந்த மிகப்பெரிய தாக்குதலாகும்.
போரில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து வெள்ளை மாளிகை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை ஆயுதங்களுக்காக யுக்ரேன் சார்ந்திருக்கிறது என்பது உறுதி.
யுக்ரேன் ஆயுதப் படை அதிகாரிகள் பிரிவுக்கான முன்னாள் செய்தித் தொடர்பாளர் விளாடிஸ்லாவ் செலென்ஸ்னியோவ், படையெடுப்பில் தொடர்ந்து முன்னேறுவதற்கு அமெரிக்கா வழங்கிய HIMAR வகை ராக்கெட்டுகள் மிக முக்கியமானவை என வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் மறைமுகமாக வழங்கப்பட்டுள்ளது.
“நாங்கள் நிறுவிய கொள்கை எல்லைகளுக்கு உட்பட்டே ஆயுதப் பயன்பாடு இருந்ததாக நாங்கள் மதிப்பீடு செய்துள்ளோம்.
அந்தக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக, அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கொள்கையில் மாற்றம் இல்லை,” என அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ரைடர் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
எல்லை கடந்த தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள, “ஆரம்பத்தில் இருந்தே” தங்கள் கொள்கைக்கு “ஏற்பவே” அந்நாட்டின் தாக்குதல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறுகையில், “ரஷ்யாவில் நீண்ட-தூர தாக்குதல்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இப்போது நடந்தவை பதிலடித் தாக்குதல்கள். அவற்றில் நான் எந்தக் குறிப்பிட்ட கட்டுப்பாட்டையும் நிர்ணயிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு யுக்ரேன் அனுமதி வாங்கியதா?
யுக்ரேனுக்கு அதிகளவில் அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருவதால், யுக்ரேனை பொறுத்தவரை அமெரிக்காவுடனான உறவு மிகவும் முக்கியம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், அமெரிக்கா இலகுரக ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் மற்றும் இதர ஆயுதங்கள் அடங்கிய 63வது ஆயுதத் தொகுப்பைக் கடந்த வாரம் வழங்கியது.
ஆனால், ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில், HIMAR ராக்கெட்டுகள், நீண்ட தொலைவுக்குப் பாயக்கூடிய பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் F-16 போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை அனுப்ப அமெரிக்க அதிபர் பைடன் மறுத்தார். ஆனால் பின்னர் அவர் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.
ரஷ்ய பிரதேசத்தில் யுக்ரேனிய தாக்குதல்கள் பற்றிய வெள்ளை மாளிகையின் கொள்கைக்கும் இது பொருந்தும். பல மாதங்களாக, யுக்ரேன் மீதான தாக்குதல்களை ஆதரிக்கும் ரஷ்ய ராணுவ தளங்களைத் தாக்குவதற்கு அதிபர் ஸெலென்ஸ்கி அனுமதி கோரினார்.
மே மாதம் அதிபர் பைடன் இறுதியாக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி எல்லையைத் தாண்டி ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த அனுமதி அளித்தார். வெள்ளை மாளிகை யுக்ரேனின் நடவடிக்கைகளை "பதிலடி தாக்குதல்" என்று விவரித்துள்ளது.
"எல்லையின் மறுபக்கத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளங்கள் யுக்ரேனில் குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்படும்போது, எல்லைக்கு அருகில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது" என ஜூன் மாதம் அதிபர் பைடன் கூறினார்.
"ரஷ்யாவிற்குள் 200 மைல் தொலைவில் தாக்குதல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை, மாஸ்கோ மற்றும் கிரெம்ளின் மீதான தாக்குதல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை" என்று அவர் கூறினார்.
நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்த ஸெலென்ஸ்கி அனுமதி கேட்டபோது அதை அமெரிக்கா மறுத்துள்ளது.
சில வாரங்களுக்குப் பிறகு, ரஷ்ய படைகள் யுக்ரேனை தாக்கத் தயாராகும் எல்லையில் உள்ள எந்த இலக்குகளுக்கும் ரஷ்ய எல்லைக்குள் தாக்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்பட்டது.
அதிபர் ஸெலென்ஸ்கி சில ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சியினர் சிலருடன் சேர்ந்து யுக்ரேனின் கைகளை மேலும் "அவிழ்த்துவிட" அமெரிக்காவை வலியுறுத்தினார்.
ரஷ்ய எல்லையில், ட்ரோன்கள் அல்லது ஏவுகணை ஏவுதளங்களை அழிப்பதற்காக ஆழமாக தாக்குவதற்கு அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட ATCAMS அல்லது நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த ஸெலென்ஸ்கி குறிப்பாக அனுமதி கேட்டார். ஆனால், அதை அமெரிக்கா மறுத்துள்ளது.
ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், "கிடைக்கும் அனைத்து வழிகளையும்" பயன்படுத்துவோம் என்று முன்னர் அச்சுறுத்திய அதிபர் புதினின் எச்சரிக்கைகள்தான் இத்தகைய அனைத்து முடிவுகளுக்கும் காரணம்.
யுக்ரேன் போரின் மூலம் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கருதிய நிலையில், அணு ஆயுதப் பயன்பாடு குறித்து அவர் விடுத்த எச்சரிக்கை இது.
யுக்ரேனுக்கு உள்ள கட்டுப்பாடுகள்
இறுதியாக, அதிபர் பைடனின் நிலைப்பாட்டைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: "எல்லை தாண்டிய தாக்குதல்கள் உட்பட, அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி தன்னை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதை யுக்ரேன் தீர்மானிக்க முடியும். ஆனால் நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தாதது உட்பட மிகத் தெளிவான எல்லைகளுக்குள் அம்முடிவு இருக்க வேண்டும்."
ஜூன் மாதம் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், யுக்ரேனின் கட்டுப்பாடுகள் "எல்லைப் பகுதிகளுக்கு" மட்டுமே என்று பரிந்துரைத்தது.
குர்ஸ்கில் நடந்த தாக்குதல் அமெரிக்காவின் இக்கட்டான நிலையை உண்மையிலேயே யாரும் அறியாத திசையில் கொண்டு செல்கிறது.
யுக்ரேனிய படையெடுப்பு என்பது 5,000 முதல் 12,000 துருப்புகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் ஒரு எல்லை தாண்டிய தரைத் தாக்குதலாகும்.
சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
இந்த வாரத்தின் நடுப்பகுதியில், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் உட்பட 1,000 சதுர கிலோமீட்டர் ரஷ்ய நிலப்பரப்பை தமது படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளைக் கைப்பற்றியதாகவும் யுக்ரேன் கூறியது.
சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்க்களத்தின் நிலைமை, போரின் எதிர்காலம் மற்றும் அது புதினின் கணிப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மேலும் விரிவாகப் பேசுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் தயங்குகின்றனர்.
அதிபர் பைடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார் அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவைத் தாமதப்படுத்துகிறார் என்று ஸெலன்ஸ்கி விரக்தியடைந்தால், அத்தகைய சூழ்நிலையில், அவர் பைடன் மற்றும் புதின் இருவரையும் கட்டாயப்படுத்த முடியும் என்று அவர் காட்ட முயல்கிறார்.
அவரது இந்த முயற்சி ஒரு துணிச்சலான சூதாட்டம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!