வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் மோசடி: பெண் கைது
02 Nov, 2026
போர் நிறுத்தம் என்ற முக்கியமான விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும் - எதிர்பார்த்தது போலவே - ஒரு உறுதியான முடிவு பற்றிய செய்தி உள்ளது. இரு தரப்புகளுமே 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டன.
"இது மிகவும் கடினமான நாளின் நல்ல முடிவு" என்று யுக்ரேனின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஹி கிஸ்லிட்ஸ்யா கூறினார். "1,000 யுக்ரேனிய குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல செய்தி" என்றார்.
இந்த பரிமாற்றம் விரைவில் நடைபெறும் என்று தனது நாட்டின் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டம் உமெரோவ் தெரிவித்தார்.
"எங்களுக்கு தேதி தெரியும்," என்று கூறிய அவர் , "நாங்கள் அதை இன்னும் அறிவிக்கவில்லை" என்றார்.
"அடுத்த கட்டம்" ஜெலன்ஸ்கி மற்றும் புதினுக்கு இடையிலான சந்திப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அந்த கோரிக்கையை "குறித்து வைத்துக்கொண்டுள்ளதாக" ரஷ்ய தூதுக்குழுவின் தலைவரான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்தார்.
இந்தியாவை ஆதரிக்க ரஷ்யா தயங்கியது ஏன்? பாகிஸ்தானுடன் புதிய உறவு மலர்கிறதா?
யுக்ரேனுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் புதின் - ஸெலன்ஸ்கியின் பதில் என்ன?
டிரம்ப், ஸெலன்ஸ்கி உறவில் புதிய திருப்பம்: திடீரென கையெழுத்தான கனிம வள ஒப்பந்தம்
"மீறப்படும் ஈஸ்டர் சண்டை நிறுத்தம்" - ரஷ்யாவின் தாக்குதல் தொடர்வதாக குற்றம் சாட்டும் யுக்ரேன்
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஜெலன்ஸ்கி மற்றும் புதினுக்கு இடையிலான சந்திப்பாக இருக்க வேண்டும் என யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டம் உமெரோவ் தெரிவித்தார்.
நானும் புதினும் பேசினால் தான் ஏதாவது நடக்கும் : டிரம்ப்
ரஷ்ய தூதுக்குழு பேச்சுவார்த்தையில் திருப்தி அடைந்துள்ளதாகவும், தொடர்புகளைத் தொடர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். வியாழக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை "ஒரு கோமாளி மற்றும் தோல்வியுற்றவர்" என்று அழைத்ததில் இருந்து இது ஒரு மாற்றமாகும்.
ஆனால் யுக்ரேன் மற்றும் அதன் சில நட்பு நாடுகளிடையே வெறுமனே காலம் கடத்தவும், போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்களிலிருந்து திசை திருப்புவதற்கும், 18வது சுற்று ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளைத் தடுப்பதற்குமான ராஜ தந்திரத்தில் ரஷ்யா ஈடுபடுகிறது என்பது போன்ற அச்சங்கள் உள்ளன.
இரு தரப்பினரும் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளே முக்கியம் என்று கூறியுள்ளார். வியாழனன்று அவர் பேசும் போது, "புதினும் நானும் சந்தித்து பேசும் வரை எதுவும் நடக்கப் போவதில்லை." என்றார்.
அந்த சந்திப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் "நிச்சயமாக தேவை" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகிறார்,
ஆனால் அதுபோன்ற சந்திப்புக்கு தயார் செய்ய நேரம் எடுக்கும். அந்த பேச்சுவார்த்தைகள் எப்போது நடந்தாலும், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பில்லை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!