சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
உக்ரைன் பாக்முட் நகரம்
மேலும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், பெல்கராட் மாகாணத்தில் பயங்கரவாத அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் இந்தப் பிரச்னையில் சிக்கி பொதுமக்கள் எட்டு பேர் காயமடைந்தனர் என அந்த மாகாணத்தின் ஆளுநர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறினார்.
மறுபுறம் 70 உக்ரைன் ஆதரவுப் படையினர் கொல்லப்பட்டனர். மீதம் இருந்தவர்கள் உக்ரைனுக்குள் விரட்டி அடிக்கப்பட்டனர் என ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். இதையடுத்து, அந்த மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.
ரஷ்ய அதிபர் புதின்
ஆனால், இதை உக்ரைன் மறுத்திருக்கிறது. இது குறித்து அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகள், ``ரஷ்யாவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய விடுதலைப் படை, ரஷ்ய தன்னார்வப் படை ஆகிய இரண்டு கிளர்ச்சிக் குழுக்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதில் ரஷ்யர்கள்தான் இருக்கிறார்கள். உக்ரைன் ராணுவத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறது.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷாயிகு, "பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் நுழைந்து, உக்ரைன் தேசியவாதிகள் நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் போர்!
எஞ்சியவர்கள் மீண்டும் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர். ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தக்கபதிலடி கொடுக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய விடுதலைப் படை, ரஷ்ய தன்னார்வப் படை ஆகிய ஆயுதக்குழுக்கள் பொறுப்பேற்றன.
இது குறித்து அவர்கள், "புதினின் ஆட்சியிலிருந்து ரஷ்யாவையும், ரஷ்ய மக்களையும் காப்பதற்காகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ரஷ்யப் படையினர் இறந்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கின்றனர். உக்ரைன் -
ரஷ்யாவுக்கிடையே ஓராண்டுக்கும் மேலாகப் போர் நடந்துவரும் நிலையில், திடீரென நடந்திருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!