திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
கியவ் நகரில் புத்தாண்டு பிறந்ததும் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உருக்குலைந்த கட்டடம்
"ரஷ்யர்களே! ராணுவம் தனக்கு பின்னால் இருப்பதாகவும், தான் முன்னணியில் இருந்து வழிநடத்துவதாகவும் உங்கள் தலைவர் காட்டிக் கொள்ள விரும்புகிறார்.
ஆனால், உண்மை என்னவென்றால் அவர் மறைந்து கொண்டிருக்கிறார். ராணுவம், ஏவுகணைகள், மாளிகைகள், குடியிருப்புகளுக்குப் பின்னே அவர் மறைந்து கொண்டிருக்கிறார்," என்று யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
"அவர் உங்கள் பின்னே மறைந்திருக்கிறார்; உங்கள் நாட்டையும், உங்கள் எதிர்காலத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கொடூர செயலை யாரும் மன்னிக்கவே மாட்டார்கள். உலகில் யாரும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். யுக்ரேன் ஒருபோதும் மன்னிக்காது," என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
இதேபோல், ரஷ்ய அதிபர் புதினும் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாகக் கூறி, யுக்ரேனில் போராடும் ரஷ்ய படைகளுக்குப் பின்னால் மக்களை அணிதிரட்ட அவர் முயன்றார்.
ரஷ்ய ராணுவ வீரர்களுடன் அந்நாட்டு அதிபர் புதின்
"ரஷ்யாவின் இறையாண்மை, சுதந்திரமான, பாதுகாப்பான எதிர்காலம் என்பது நம் வலிமை மற்றும் விருப்பத்தைப் பொருத்தே உள்ளது என்பதை எப்போதும் அறிந்திருந்தோம். அது இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று புதின் தெரிவித்தார்.
"நமது மக்களையும் வரலாற்றில் நம்மிடம் இருந்த நிலங்களையும் பாதுகாப்பதாகவே" யுக்ரேன் மீது படையெடுத்ததாகக் கூறிய அவர், "தார்மீக, வரலாற்று ரீதியான உரிமைகள் நம் பக்கம் உள்ளது" என்றார்.
யுக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யாவை மேற்குலகம் தூண்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.
"சமாதானம் பற்றி மேற்குலகம் பொய் கூறியது. அவர்கள் ஆக்கிரமிப்புக்குத் தயாராகி வந்தனர். ரஷ்யாவை பலவீனமாக்கி துண்டாட யுக்ரேனையும் அதன் மக்களையும் இழிவான முறையில் அவர்கள் பயன்படுத்துகின்றனர்," என்று புதின் சாடினார்.
போரின் தொடக்கம் பற்றிய ரஷ்யாவின் கூற்றுகளை யுக்ரேனும் மேற்குலகும் நிராகரிக்கின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!