Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained
25 Oct, 2026
ஈராக் ஜனாதிபதி சதாம் உசைன் இந்தப் பிராந்தியத்தின் மையப் புள்ளியாக இருந்தார். அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள், ஈராக்கில் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்று 1990 களிலேயே வலியுறுத்தி இருந்தனர்.
2003 ஆம் ஆண்டில் போர் தொடங்கியபோது, அதற்கு 'ஜனநாயகம்' மற்றும் 'பேரழிவு ஆயுதங்கள்' போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், பென்டகனின் உட்புற விவாதங்களில், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீண்டகாலப் பிடியை உறுதிப்படுத்துவதே முதன்மை நோக்கமாக இருந்தது.
வெனிசுவேலா: மேற்கத்திய அரைக்கோளத்தின் ஈராக்
ஈராக் போர் குறித்த புரிதல், தற்போது வெனிசுவேலாவில் டிரம்பின் நடவடிக்கைகளை விளக்குவதற்கு மிகவும் உதவுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு மற்றும் தங்கம் போன்ற கனிம வளங்களைக் கொண்ட வெனிசுவேலா, மேற்கு அரைக்கோளத்தில் ஈராக் வகித்த அதே மூலோபாய இடத்தைப் பெற்றுள்ளது.
ஹியூகோ சாவேஸ்
1990களின் இறுதியில் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெனிசுவேலா வாஷிங்டனிடம் இருந்து விலகி, ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டது. இதற்குப் பதிலடியாக, புஷ், ஒபாமா, டிரம்ப் (முதல் முறை) மற்றும் பைடன் என அடுத்தடுத்த அமெரிக்க ஆட்சிகள் வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றன.
2001 ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், 'வெனிசுவேலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளை நாம் எப்போதும் கவனித்து வர வேண்டும், அது நமது வியூகத்தில் எப்படிப் பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும்' என்று ஒரு குறிப்பில் தெரிவித்திருந்தார்.
அதாவது, வெனிசுவேலா ஒரு அரசியல் சிக்கலாகப் பார்க்கப்படவில்லை, மாறாக ஒரு 'மூலோபாய எரிசக்தி சொத்தாக' மட்டுமே பார்க்கப்பட்டது.
சீனாவுடனான போட்டி மற்றும் 2026 நடவடிக்கை
2010 ஆம் ஆண்டுக்கு பிறகு, வெனிசுவேலாவின் முக்கியத்துவம் அமெரிக்கா-சீனா இடையிலான போட்டிக்கு மாறியது.
சீனா, வெனிசுவேலாவுடன் பெரும் நிதி மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களைச் செய்து, அமெரிக்காவின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்கத் தனது விநியோகத்தைப் பன்முகப்படுத்த முயன்றது.
இது அமெரிக்காவிற்குத் தனது சொந்த பிராந்தியத்திலேயே அச்சுறுத்தலாகத் தெரிந்தது. 2017 மற்றும் 2025 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணங்களில், அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக உள்ள பிற நாடுகள் இந்த அரைக்கோளத்தில் கால் பதிப்பதைத் தடுப்போம் என்று எச்சரிக்கப்பட்டது.
'மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை மற்ற நாடுகள் கட்டுப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்' என்ற வரிகள், கடந்த ஜனவரி 3 ஆம் திகதி வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை இலக்கு வைத்து நடந்த இராணுவ நடவடிக்கை முன்னோடியாக அமைந்தன.
இன்று எண்ணெய் வளம் 1990களில் இருந்தது போல முதன்மையாக இல்லாவிட்டாலும், போர், தொழில்துறை உற்பத்தி மற்றும் சர்வதேச நாணயத்தின் மதிப்பைத் தீர்மானிப்பதில் அது இன்னும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வெனிசுவேலா, சவுதி அரேபியா, ஈரான், கனடா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய ஏழு நாடுகளில் தான் உலகின் பெரும் பகுதி எண்ணெய் உள்ளது.
வெனிசுவேலாவில் தனக்குச் சாதகமான ஒரு ஆட்சியை நிறுவுவதன் மூலம், உலகின் ஏழு முக்கிய எரிசக்தி மையங்களில் ஆறில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த வாஷிங்டன் முயல்கிறது. இது சீனாவின் நீண்டகால எரிசக்தித் தேவையைப் பலவீனப்படுத்தும் ஒரு மூலோபாய நகர்வாகும்
வெனிசுவேலாவில் நடந்த இந்த ஆட்சி மாற்ற முயற்சி என்பது, டிரம்பின் தன்னிச்சையான முடிவு அல்ல. இது பல தசாப்தங்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு நீண்ட கால வியூகத்தின் ஒரு பகுதியாகும்.
மாறிவரும் அரசியல் பேச்சுக்களுக்கு அடியில், 'முக்கியப் பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்' என்ற நிலையான எண்ணம் அமெரிக்கத் திட்டமிடலாளர்களிடம் உள்ளது. சீனா நீண்ட காலத் திட்டங்களை வகுப்பதில் வல்லது என்று சொல்லப்பட்டாலும், 1990-களின் இறுதியிலிருந்து அமெரிக்காவின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால், வாஷிங்டனும் மிகத் தெளிவான, நீண்ட கால மூலோபாய பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!