news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ராஜகுமாரி மரணம் : 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

01 Sep, 2023
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ஆர். ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் மேலும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 2 சார்ஜன்ட்களும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை – நாவின்ன பகுதியைச் சேர்ந்த ஆர். ராஜகுமாரி என்ற பெண் கொழும்பு கொட்டா வீதியிலுள்ள வீடொன்றில் பணிப்புரிந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த மே மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!