news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ராஜபக்ச குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த யோசிதவின் கைது – படங்கள்

31 Jan, 2016
 

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன் ஒன்று குவிந்திருந்தனர்.

யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாக செய்தி அறிந்தவுடன், அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச, மற்றும் சிறிய தந்தைமாரான பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சகோதரரான நாமல் ராஜபக்ச ஆகியோர் கடுவெல நீதிமன்றத்துக்கு ஓடி வந்தனர்.

மகிந்த ராஜபக்ச வெளியூரில் இருந்ததால், மாலை 6.12 மணியளவில் தான் கடுவெல நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தார்.

யோசித ராஜபக்சவை அடுத்த மாதம் 11ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

எனினும், அவரை கைவிலங்கிட்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல காலதாமதமானது. இருள் சூழ்ந்த பின்னரே பலத்த பாதுகாப்புடன் அவர் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

yoshitha-arrest-rajapaksha-family-2யோசித ராஜபக்சவின் கைதினால், கடுவெல நீதிமன்றத்தில்  ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். தனது மகன் கைவிலங்கிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டதை பார்த்து மகிந்த ராஜபக்ச கண்கணங்கிப் போயிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “எனது மகன் தவறு செய்திருப்பான் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவன் அப்பாவி என்று எனக்குத் தெரியும். அவர்கள் என்னைப் பழிவாங்க முயற்சிக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டார். yoshitha-arrest-rajapaksha-family-3yoshitha-arrest-rajapaksha-family-4yoshitha-arrest-rajapaksha-family-5yoshitha-arrest-rajapaksha-family-6yoshitha-arrest-rajapaksha-family

சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

கடுவெல நீதிமன்றத்தினால் இன்று மாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச, கைவிலங்கிடப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

yoshitha-arrestmahinda1yoshitha-lock-2mahinda-tear

அதேவேளை, தனது மகன் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது கண்களில் இருந்து நீர் பெருகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படங்கள் – ஏஎவ்பி

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!