தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
இதன் பின்னரே மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவிளை வழங்கவும், அமைச்சுக்களை பொறுப்பேற்கும் தீர்மானம் வலுப்பெற்றது.
ஆனால் தற்போதைய சூழலில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குவதை பஷpல் ராஜபக்ஷ விரும்ப வில்லை.
மாறாக அடுத்த தேர்தல் ஊடாக மீண்டும் அதிகாரத்திற்கு பொதுஜன பெரமுனவை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணிலின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகளையே பஷpல் ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார்.
டுபாய் செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பிரதமர் பதவி விவகாரம் மற்றும் ஆளுநர்கள் மாற்றம் குறித்தும் பஷpல் ராஜபக்ஷ கலந்துரையாடியிருந்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் பிரதமர் பதவி மாற்றம் குறித்து தற்போதைய பிரதமர் தினேஷ; குணவர்தனவும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதாணி ஆகியோருடன் டுபாயில் உள்ள பஷpல் ராஜபக்ஷ தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, பிரதமர் பதவி பொதுஜன பெரமுவிற்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுனவை பொறுத்த வரையில், அதன் முழு அதிகார மையமாக இருப்பது பஷpல் ராஜபக்ஷவாகும்.
அவரது தீர்மானங்களை அறிவிக்கும் நபராக சாகர காரியவசம் உள்ளார். பிரதமர் பதவியை பொதுஜன பெரமுன கோர வில்லை என்று சாகர காரியவசம் கூறியது, பஷpல் ராஜபக்ஷவின் நிலைப்பாட்டையாகும்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கை பொதுஜன பெரமுவின் தீர்மானத்திற்கு அப்பால்பட்ட விடயமாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மையப்படுத்தி பொதுஜன பெரமுனவிற்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் தாக்கம் ராஜபக்ஷ குடும்பத்திற்குள்ளும் எதிரரொலித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்கால நலன் சார்ந்த விடயங்களில் மஹந்த ராஜபக்ஷ எப்போதும் முன்னுரிமையளித்து செயல்படுவது உண்டு.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்று, அதனூடாக பெரும் அரசியல் பாய்ச்சலுக்கான தருணத்தை நாமல் ராஜபக்ஷ விரும்புகிறார்.
ஆனால் ஜனாதியாக ரணிலை வைத்துக்கொண்டு அந்த முயற்சி சாத்தியப்படுமா? என்பது மஹிந்த ராஜபக்ஷவின் சந்தேகமாக இருந்திருக்க கூடும். எனவே தான் பிரதமர் பதவியை பெறுவதில் காட்டிய ஆர்வத்தை நாமல் ராஜபக்ஷவின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான விருப்பத்தில் காண்பிக்காது இருந்துள்ளார்.
எவ்வாறாயினும் அடுத்த வருடம் முதல் காலாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடுகளும் இல்லை.
ஜனாதிபதி ரணிலை தேசிய வேட்பாளராக ஏனைய கட்சிகள் ஏற்க வேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கையாக உள்ள நிலையில், பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியவை எவ்வாறான திட்டங்களை வகுத்து வருகின்ற என்பது இனிவரும் நாட்களில் அறியக்கூடிய வகையில் இருக்கும்.
அதே போன்று உத்தேச ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் தாக்கம் செலுத்தும் என்பதால் அரசியல் கூட்டணிகளுக்குள் சிறுபான்மை கட்சிகளை உள்வாங்க பிரதான கட்சிகள் ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!